நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த "தருணம்" பட நடிகர்
1738405753295

நடிகர் கிஷன் தாஸ் தனது நீண்ட நாள் காதலி சுச்சித்ராவைக் கரம் பிடித்திருக்கிறார்.
தொகுப்பாளராக வலம் வந்த கிஷன் தாஸ், "முதல் நீ முடிவும் நீ" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர், நேர்கொண்ட பார்வை, சிங்கப்பூர் சலூன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் உருவான `தருணம்' திரைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் தனது தோழி சுச்சித்ராவை கரம் பிடித்திருக்கிறார் நடிகர் கிஷன் தாஸ்.
இருவருக்கும் கடந்தாண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்களின் திருமணத்திற்குத் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கிஷன் தாஸ் "ஈரப்பதம் காற்று மழை" படத்தில் தற்போது நடித்து வருகிறார்.