பண மோசடி வழக்கு... பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட் ...!

பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், . பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட் வழங்கி பஞ்சாப் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் சோனு சூட். தமிழில் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி, சிம்பு நடித்த ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னாவிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் சோனு சூட் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பல முறை கோர்ட் சம்மன் அனுப்பியும் சோனு சூட் ஆஜராகததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வரும் 10-ம் தேதிக்குள் சோனு சூட்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், வாரண்டை நிறைவேற்றியதற்கான அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.