பிரமாண்டமாக நடைபெற்ற ’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை...!

nayanthara

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட பூஜை பிரமாண்டமாக  நடைபெற்றது.

‘அரண்மனை 4’ படத்துக்குப் பிறகு சுந்தர்.சியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது சுந்தர்.சி நயன்தாராவை வைத்து  ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு  நடிகர் ஆர்ஜே பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கிய படம், ‘மூக்குத்தி அம்மன்’. இதில் நயன்தாரா, மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார்.  இந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது
 



 
தற்போது வேல்ஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ், ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து ‘மூக்குத்தி அம்மன் 2’   படத்தை தயாரிக்கின்றன. இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், தற்போது படப்பிடிப்பு பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியுள்ளது. கோயில் செட் போடப்பட்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குநர் சுந்தர்.சி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this story