நயன் தாராவின் மாறுபட்ட நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 பட விமர்சனம்

The first single ‘Aadikuththu’ from ‘Mookkuthi Amman’ has been unveiled

2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தீயசக்தியை அழிக்கும்போது ஒரு தவறு செய்துவிட்டதாக வருத்தப்படும் மூக்குத்தி அம்மன், தனது அவதாரத்தை முடித்துக்கொள்கிறார். 2 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு உயிர்த்தெழும் ராட்சசியான ரெஜினா கசாண்ட்ரா, தனது காதலன் துனியா விஜய்யுடன் இணைந்து, மூக்குத்தி அம்மன் மீண்டும் அவதாரம் எடுப்பதற்குள் தற்போதைய காலத்தில் கான்ஸ்டபிளான மற்றொரு நயன்தாராவை கொல்ல முயற்சிக்கிறார். பிறகு நடப்பதே மீதி கதை.
‘கமர்ஷியல் படங்களின் கிங்’ என்ற பட்டத்தை இப்படத்திலும் இயக்குனர் சுந்தர்.சி தக்கவைத்துக் கொள்கிறார். அப்பாவியான போலீஸ் கான்ஸ்டபிள், ஆக்ரோஷமான மூக்குத்தி அம்மனாக நயன்தாராவின் நடிப்பை பாராட்டலாம். அவருக்கும், ரெஜினா கசாண்ட்ராவுக்குமான கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஒரு சோறு பதம். கவர்ச்சியான வில்லியாக வரும் ரெஜினா கசாண்ட்ராவின் திரைப்பயணத்தில் இது ஒரு மறக்க முடியாத படம்.
ஆவேசமான காட்சிகளில் பெருங்குரலெடுத்து பழிதீர்க்கும் பணியை செவ்வனே செய்துள்ளார். கன்னட நடிகர் துனியா விஜய், கருடா ராம், ஊர்வசி, நிதின் சத்யா, மைனா நந்தினி, யோகி பாபு, சிங்கம்புலி, ராஜ்கபூர், சுவாமிநாதன், விச்சு, வெங்கட் ராகவன் உள்பட பலர், இயக்குனர் சொன்னதை புரிந்துகொண்டு நன்கு நடித்துள்ளனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பின்னணி இசைதான் படத்தின் ஹீரோ. ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தின் பணி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

Share this story