மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு குறித்த அப்டேட்...

sundar c

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை நயன்தாரா தற்போது டெஸ்ட், டாக்ஸிக், ராக்காயி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் ஆர்ஜே பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கிய படம், ‘மூக்குத்தி அம்மன்’. இதில் நயன்தாரா, மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இதன் 2-ம் பாகத்தை சுந்தர்.சி இயக்குவதாக தகவல் வெளியானது. வேல்ஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ், ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.


 

இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், தற்போது  படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன் பூஜை மார்ச் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பத்திரிக்கையை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் சுந்தரி சி இடம் வழங்கினார். மேலும் மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் இதற்காக பிரசாத் லேபில் பிரம்மாண்ட செட் அமைக்கபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் ரூ.100 போடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Share this story