தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் மூக்குத்தி அம்மன் 2-எத்தனை ஹீரோயின்கள் தெரியுமா ?

The first single ‘Aadikuththu’ from ‘Mookkuthi Amman’ has been unveiled

கடந்த 2020ம் ஆண்டு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’. அரசியல், நகைச்சுவை கலந்த பேண்டஸி கதையாக உருவான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் இரண்டாம் பாகம் தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்திலும் சினேகா, ரெஜினா கசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், அவ்னி சினிமாஸ், ரவுடி பிக்சர்ஸ், ஐவி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ரெஜினா சடண்ட்ரா வில்லியாக நடிப்பது தெரிய வருகிறது. டீசரின் தொடக்கத்திலேயே ஆபத்தில் இருக்கும் அரச குடும்பத்து குழந்தை, அதை அழிக்க துடிக்கும் தீய சக்திகள் மற்றும் அதனுடன் போராடும் மனிதர்கள் என ஒரு புராண கதையின் உணர்வை சுந்தர்.சி காட்சிப்படுத்தியுள்ளார்.

Share this story