மூக்குத்தி அம்மன்- 2 படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இல்லையா..? யார் தெரியுமா?

Mookuthi amman 2


ஆர்.ஜே. பாலாஜி, நடிகை நயன்தாரா, ஊர்வசி, நடிகர் மௌலி என பல முன்னணி நடிகர்கள் நடித்து 2020-ல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் மூக்குத்தி அம்மன்.இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து எஸ்.ஜே. சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து, இந்த படத்தில் நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜிக்கு அருள் தரும் அம்மன் வேடத்தில் நடித்திருப்பார். நயன்தாரா கடவுள் வேடத்தில் நடிப்பது இது தான் முதல் முறை. அதனால் இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் வெளி வரும் என அதிகாரப்பூர்வமாக ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

R J balaji

ஆனால் அந்த படத்தை யார் இயக்க போகிறார் என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. இந்த நிலையில்,மூக்குத்தி அம்மன் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கப்போவதில்லை எனவும், அந்த படத்தை இயக்க பல இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும். தற்போது மூக்குத்தி அம்மன் படத்தை இயக்க சுந்தர். சி ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sundhar C

Share this story