ஒன்றுக்கும் மேற்பட்ட வைல்ட்கார்ட் போட்டியாளர்கள்.. அதில் ஒருவர் எவிக்ட் ஆனவரின் மனைவியா?

big boss


விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரவீந்தர் மற்றும் அர்னவ் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் எவிக்சன் ஆகியிருக்கும் நிலையில், தீபாவளி அன்று சர்ப்ரைசாக ஒன்றுக்கும் மேற்பட்ட வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பதோடு, அதன் பிறகு நான்கே நாட்களில் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், ரவீந்தர் மற்றும் அர்னவ் ஆகிய இருவரும் வெளியேறி இருக்கும் நிலையில், தீபாவளி அன்று ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உள்ளே வைல்ட்கார்ட் என்ட்ரி ஆக இருப்பதாகவும், அதில் ஒருவர் அர்னவ் மனைவி திவ்யா என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்னவ் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆக இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் திவ்யா முடியாது என்று சொல்லிவிட்டதால், அர்னவ் மட்டும் சென்றதாகவும் கூறப்படுகிறது.

தற்போது திவ்யா சன் டிவியில் 'செவ்வந்தி' என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த சீரியல் நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும், அதனால் திவ்யா வைல்ட்கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.


திவ்யாவை தவிர, ஐஸ்வர்யா, ரோஷன், ஜோயா மற்றும் சிலரின் பெயர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி என பெயர்கள் அடிபட்டு கொண்டு இருப்பதாக கூறப்படுவதால், தீபாவளிக்கு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this story