‘விஜயகாந்த்’ மறைவு- தியேட்டர்களில் ரத்து செய்யப்பட்ட காலை காட்சிகள்….

photo

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவையொட்டி திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

photo

சினிமா, அரசியல் என இரண்டிலும் ஒரு கலக்கு கலக்கிய விஜயகாந்த் இன்று மருத்துவமனையில் காலமானார். தொடர்ந்து ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் கனத்த இதயத்துடன் அவரது வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர். அதேப்போல பலரும் இரங்கல் பதிவிட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் விஜயகாந்தின் மறைவை முன்னிட்டு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தகர் சங்கம் சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமலாமல் தமிழ் நாடு முழுவதும் இன்று அனைத்து தியேட்டர்களிலும் காலை காட்சிகள் ரத்து செய்யப்படும் என திரைப்படம் விநியோகஸ்தகர் திருப்பூர் சுப்ரமனியம் தெரிவித்துள்ளார்.

Share this story