புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜூ கீப்பர் டீசர் ரிலீஸ்

புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜூ கீப்பர் டீசர் ரிலீஸ்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த கோமாளித்தனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேநேரம் இவரது டைமிங் காமெடி மற்றும் இயல்பான பாடி லேங்குவேஜ் தான் இந்த பிரபலத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. அஜித்தின் வலிமை, அருண் விஜய் நடித்த யானை, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன்  என அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். 

இந்நிலையில் குறுகிய காலத்தில் பிரபலமான புகழ், தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். அந்த வகையில் 'மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை சுரேஷ் இயக்கி வருகிறார். கதாநாயகியாக சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் நடித்த ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

Share this story