‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் முதல் பாடல் அப்டேட்....!

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஆர்யா, சார்பட்டா பரம்பரை 2, வேட்டுவம் ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர், மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.இந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், அதுல்யா ரவி, அனகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். எஃப்ஐஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
The first single from #MrX
— Arya (@arya_offl) February 25, 2025
My Fav ❤️#Haiyodi - lyric video coming out on 27th February. A @dhibuofficial musical.
Sung by @KapilKapilan_
Lyrics by @KrithikaNelson
Produced by @lakku76 #Maverik
Co-produced by @venkatavmedia @arya_offl @realsarathkumar @Gautham_Karthik… pic.twitter.com/5eNpz1QQnC
ஸ்பை திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படத்தின் டீசரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், "மிஸ்டர் எக்ஸ்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.