மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நடிகை ‘மிருணாள் தாகூர்’!
1701743455000

நடிகை மிருணாள் தாகூர் மஞ்சள் நிற புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் படத்தின் மூலமாக பிரபலமானவர் மிருணாள் தாகூர். அந்த படத்தில் சீதா மகாலெட்சுமியாக நமக்கு அறிமுகமான மிருணாள் அதற்கு முன்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் எதிர்பார்த்த வரவேற்பை அவருக்கு பெற்றுதரவில்லை. இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் இந்தி மொழிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள மிருணாள் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறது. அந்த வகையில் மஞ்சள் நிற புடவையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.