தோனி தயாரிக்கும் படம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

lgm

எம்.எஸ். தோனி தயாரிக்கும் படத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் என்ற பெயரில் புதிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலமாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. 

lgm

அதன்படி தனது முதல் படமாக தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 'எல்ஜிஎம்' என்ற படத்தை தயாரித்து வருகின்றனர்.  ஓ மணப்பெண்ணே, தாராள பிரபு போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கி் வருகிறார். 

lgm

இந்த படத்தில் நடிகை இவானா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து நடிகை நதியா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்ரல் 10-ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு போஸ்டராக வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story