“சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கு”- பாஸ்கர் நெகிழ்ச்சி

ச்

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய 3 பிரிவில், பார்கிங் படத்திற்கு விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே இந்த படம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருது. அதில், இந்த கதையின் படப்பிடிப்பு தொங்கும் முன்பே எனக்கு தெரியும். இயக்குனர் இந்த படத்தின் கேரக்டர் குறித்து என்னிடம் முன்பே சொல்லிவிட்டார். இது எல்லா இடத்திலும் இருக்கும் பிரச்னை தான். படத்தின் கதையை அவர் சொன்ன விதமும் சிறப்பாக இருந்தது. அதன்பிறகு தயாரிப்பாளர்கள் வந்து பேசினார்கள். இளம்பரிதி என்ற அந்த கேரக்டர் ரொம்ப நல்லா இருந்தது. இந்த மாதிரி நெகடீவ் கலந்த கேரக்டர் பண்ணணும். குணச்சித்திர கேரக்டர் பண்ணிட்டு இருக்கேன். இதுவும் ஒரு நெகடீவ் கலந்த நல்ல கேரக்டர் தானே அதனால் நிச்சயமாக பண்ணுகிறேன் என்று ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.


இதனிடையே தற்போது தேசிய விருது கிடைத்துள்ளது குறித்து சன் நியூஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த பெருமை எனது அன்புமகன் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும், அதன் தயாரிப்பாளர் தினேஷ் அவருக்கும்தான் போய் சேர வேண்டும். எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்த படம் தான் இந்த பார்க்கிங். இந்த படத்திற்கு தேசிய விருது கொடுத்த தேர்வு கமிட்டிக்கு எனது மனமார்ந்த நன்றி. படத்தை வெற்றிப்படமாக்கிய தமிழக மக்களுக்கும் நன்றி'' எனக் கூறினார்.

Share this story