Chikitu Vibe -ல் இசையமைப்பாளர் அனிருத்

anirudh

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர். இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி சில நாட்களுக்கு ஜெய்பூர் சென்றார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு  சிகிடு வைப் என்ற பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 10 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இப்பாடலில் ரஜினிகாந்த் ஒரு நடன ஸ்டெப்பில் ஆடியிருப்பார் அதை தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத் ரீகிரியேட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.


 

Share this story