கவினின் ‘கிஸ்’ படத்திலிருந்து அனிருத் விலகல்..என்ன காரணம்..?

kavin

கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்திய திரையுலகில் பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். அவருடைய இசைக்காக பல்வேறு படக்குழுவினர் காத்திருக்கிறார்கள். தற்போது ‘கிஸ்’ படத்தில் இருந்து அனிருத் விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக ஜென் மார்டின் இசையமைப்பாளராக பொறுப்பேற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’.
 
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் கவின் நாயகனாக நடித்து வருகிறார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முழுக்க காதல் பின்னணியில் காமெடியாக திரைக்கதை அமைத்துள்ளார் சதீஷ். இப்படம் குறித்த எந்தவொரு அறிவிப்புமே இதுவரை வெளியாகவில்லை. கவின் நடித்த ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் ஜென் மார்டின். அவருடைய அடுத்த படமான ‘கிஸ்’ படத்துக்கும் அவரையே சிபாரிசு செய்திருக்கிறார் கவின்

Share this story