மலையாளத்தில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் அனிருத்

மலையாளத்தில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் அனிருத்

தமிழ் சினிமாவில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் இசையமைப்பாளர் அனிருத் தான். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘3’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் இசையமைத்த ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலக அளவில் அவரை பிரபலமாக்கியது. அவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திற்கும் இசையமைத்துவிட்டார். தற்போது அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். தொடர்ந்து கோலிவுட்டின் முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக ‘ராக் ஸ்டாராக’  உருவெடுத்தார். தற்போது கோலிவுட்டை கடந்து பாலிவுட் எண்ரீ, வெளிநாட்டு கான்செட் என புகழின் உச்சிக்கு வளர்ந்து வருகிறார். 

மலையாளத்தில் அறிமுகமாகும் இசையமைப்பாளர் அனிருத்

இந்நிலையில், தற்போது பிருத்விராஜ் நடிக்கும் டைசன் என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் அனிருத் அறிமுகம் ஆகிறார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். 
 

Share this story