நானியுடன் 3-வது முறையாக இணையும் இசையமைப்பாளர் அனிருத்...!

நடிகர் நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 'தி பாரடைஸ்' படத்தில் நானி நடித்து வருகிறார்.தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்', ’அடடே சுந்தரா’, `தசரா', `ஹாய் நான்னா', ’சூர்யாவின் சனிக்கிழமை' ஆகிய திரைப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன.தற்போது இயக்குனர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் 'ஹிட் 3' படத்தில் நானி நடித்து வருகிறார். சமீபத்தில் நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு வெளியானது.
This one is special. My dear @NameisNani and @odela_srikanth 💥💥💥 వెర్రిగా పోదాం ⚡️⚡️⚡️ https://t.co/pfoBlBV1Fx
— Anirudh Ravichander (@anirudhofficial) February 2, 2025
தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்குத் 'தி பாரடைஸ்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனிருத் இசையமைக்கும் 3-வது நானி படமாக 'தி பாரடைஸ்'அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு நானி நடித்த ஜெர்ஸி, கேங்ஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.