டெஸ்ட் படத்தின் 2வது பாடலை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்...!

டெஸ்ட்’ படத்தின் Hope என்னும் 2வது பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சசி காந்த் இயக்குநராக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குவதோடு சசி காந்தே தயாரித்தும் உள்ளார். நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஏப்ரல் 4ஆம் தேதி நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.
Happy to release #Hope – a haunting melody from #TEST that hits straight to the soul! ✨
— Anirudh Ravichander (@anirudhofficial) March 20, 2025
Composed & sung by @ShakthisreeG in 5 languages! 💥https://t.co/dvt0ZxbjvF
Best wishes my dear friends @sash041075 @chakdyn @ActorMadhavan #Nayanthara #Siddharth @studiosynot @netflixindia…
இப்படத்தில் இருந்து சித்தார்த் மற்றும் நயன்தாரா மாதவனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு அண்மையில் வெளியிட்டது. மேலும் arena என்னும் பாடலும் வெளியானது. இந்நிலையில், தற்போது Hope என்னும் 2வது பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்.