புதிய இசை நிறுவனத்தை தொடங்கியுள்ள இசையமைப்பாளர் டி இமான்..! திரைத்துறையினர் வாழ்த்து..

imman

தளபதி விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலமாக இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்தவர் டி.இமான். தொடர்ந்து பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாகிளர் இடத்தை பிடித்தார். இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் அவர், திரைப்பயணத்தில் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார், “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இமான், தற்போது DI Sound Factory என்னும் சொந்த இசை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.  



டி இமான் தொடங்கியுள்ள இசை நிறுவனத்திற்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கார்த்தியம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், இசையின் இந்தப் புதிய அத்தியாயத்தில் நீங்களும் உங்கள் குழுவும் வெற்றிபெற வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 
 

Share this story