`குட் பேட் அக்லி' அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்...!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி’.
இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.
Started composing for the most special project today …. God Bless U ❤️🙌 . Fire starts NOW 🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) February 11, 2025
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது., 'குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு சிறப்பு ப்ராஜக்டிற்கான பின்னணி இசையை இன்று தொடங்கினேன். காட் பிளெஸ் யூ மற்றும் பயர் ஸ்டார்ட்ஸ் நவ்" என பதிவிட்டுள்ளார். இவர் குட் பேட் அக்லி திரைப்படத்தை குறித்து தான் கூறுகிறார் என நெட்டிசன்கள் கமெட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தற்பொழுது திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.