'ரெட்ரோ' படத்தின் அடுத்த பாடல் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

santhosh narayanan

'ரெட்ரோ' படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் 'ரெட்ரோ.' இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.


ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் மிகவும் வைரலான நிலையில், இப்படத்தின் புதிய பாடல் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story