இசைஞானியை சந்தித்து வாழ்த்துபெற்ற தேசிய விருது இசையமைப்பாளர் !

dsp

தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார். 

தென்னிந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம்  வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத். தெலுங்கு, தமிழ் என  பல மொழிகளை அவர் இசையமைத்து வருகிறார். தமிழில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள அவர், தற்போது கங்குவா, விஷால் 34 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  ‌ 

dsp

தெலுங்கில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களுக்கு சிறந்த இசையை கொடுத்து வருகிறார்.‌ அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் வெளியான 'புஷ்பா' படத்திற்கு சிறந்த இசையை கொடுத்திருந்தார். தற்போது இந்த படத்திற்கு சிறந்த இசையை கொடுத்ததற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 

dsp

இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்,  இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து தேசிய விருது பெற்றமைக்கு வாழ்த்து பெற்றார். சென்னையில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவில் நடந்த இந்த சந்திப்பின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 

 


 

 

Share this story