சயின்ஸ பிக்ஷன் படத்தில் ஜிவி பிரகாஷ்‌‌.. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் புதிய படம் !

gv prakash

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'திட்டம் இரண்டு' படத்தை விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கி வருகிறார். '96' பட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கெளரி கிஷன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். டைம் டிராவல் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. 

gv prakash

ஜிவி பிரகாஷ் படத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Share this story