"என்னுடைய கிரிக்கெட்டின் கடவுள்"... தல தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தமன் !

கிரிக்கெட் வீரர் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இசையமைப்பாளர் தமன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில் நடித்த சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கோப்பைக்கான இலச்சினை மற்றும் சின்னம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி மற்றும் இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கிரிக்கெட் வீரர் தோனியுடன் செல்பி புகைப்படம் ஒன்றை இசை அமைப்பாளர் தமன் எடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நிகழ்ச்சி பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய மனிதர்.. என்னுடைய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பால் என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது. உங்கள் மில்லியன் மற்றும் பில்லியன் கணக்கான ரசிகர்களில் ஒருவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளீர். இதை சாத்தியமாக்கிய அன்புக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.