உருவாகிறது முத்தையா முரளிதரனின் பயோபிக்.. ‘800’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

MuthiahMuralidaran

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கென்று தனி அங்கீகாரம் இருக்கிறது என்றால் அதற்கு காரணமானவர் முத்தையா முரளிதரன். இலங்கை அணியின் நட்சத்திர விரராக இருந்த அவர், 800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். சர்வதேச அளவில் இன்றைக்கு கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 

800

அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘800‘ என்ற தலைப்பில் உருவலாகி வரும் இந்த படத்தில் முதலில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். ஆனால் அவர் நடிக்க எதிர்ப்பு கிளம்பியதால், ஸ்லம்டாக் மில்லியனர், லயன் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் நடித்து வருகிறார். மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகிறது. 

எம்.எஸ்.ஸ்ரீபதி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் நாசர் மற்றும் வடிக்கரசி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story