ரீரிலீஸ் ஆகும் ரஜினியின் ‘முத்து’ திரைப்படம்!

photo

ஓவ்வொரு நடிகருக்கும் ஒரு ஐகானிக் படம் இருக்கும், அதுபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எத்தனை சூப்பர் ஹிட் படம் கொடுத்திருந்தாலும் ‘முத்து’ அவருக்கு கூடுதல் ஸ்பெஷலான படம். காரணம் இன்றும் ரசிகர்களின் விருப்பமான படமாக அது  உள்ளது.


1995ல் வெளிவந்த முத்து படத்தை கே.எஸ் ரவிகுமார் இயக்க ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார். இந்த படத்தில் மீனா, வடிவேலு, செந்தில், சரத்பாபு, ராதாரவி, ரகுவரன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றும் பலரால் ரசிக்கப்படும் பாடலாக உள்ளது. இந்த நிலையில் முத்து படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதுவும் இந்த மாதத்தில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவலால் ரஜினி ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.

Share this story