ரீ-ரிலீஸுக்கு கிடைத்த அமோக வரவேற்பு- நினைவலைகளில் மிதக்கவிட்ட ‘முத்து’

photo

முத்து படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், நடிகை மீனா ஆகியோர் முதல் காட்சியை பார்த்து ரசித்துள்ளனர்.

photo

கவிதாலயா தயாரிப்பில், கடந்த 1995ல் வெளிவந்த முத்து படத்தை கே.எஸ் ரவிகுமார் இயக்க ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார். இந்த படத்தில் மீனா, வடிவேலு, செந்தில், சரத்பாபு, ராதாரவி, ரகுவரன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றும் பலரால் ரசிக்கப்படும் பாடலாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படம் 25 ஆண்டுகளை கடந்த நிலையில், பல முறை டிவியில் பார்த்தும் ரசிகர்கள் மீண்டும் தியேட்டருக்கு படையெடித்துள்ளனர். படத்தின் இயக்குநர் கே.எஸ் ரவிகுமார், நடிகை மீனா ஆகியோர் ,முதல் காட்சியை சென்னை ரோகிணி தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளனர்.

photo

தொடர்ந்து படம் குறித்து நிறைய வஷயங்களை பகிர்ந்துகொண்ட இயக்குநர் விரைவில் படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகும் என உறுதியளித்துள்ளார்.

Share this story