முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படம்... நாளை வெளியாகும் சூப்பர் அறிவிப்பு !

MuthiahMuralidaran'
 பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகிறது. 

கிரிக்கெட் உலகில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குறிப்பிடத்தக்கவர். 800 விக்கெட்டுகள் எடுத்து அபார சாதனை படைத்தவர். அதனாலேயே அவரது வாழ்க்கை வரலாற்று படத்துக்கு '800' என்று டைட்டில் வைத்தார்கள். முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் எதிர்ப்புகள் பல எழுந்ததால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகினார். 

MuthiahMuralidaran'

இதையடுத்து விஜய் சேதுபதிக்குப் பதிலாக, ஸ்லம்டாக் மில்லியனர், லயன் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் நாசர் மற்றும் வடிக்கரசி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம்.எஸ்.ஸ்ரீபதி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 

மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 8 மணிக்கு வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

 

Share this story