முத்தையா முரளிதரனின் சொல்லப்படாத கதை... 800 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

முத்தையா முரளிதரனின் சொல்லப்படாத கதை... 800 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள 800 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘800’. முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததால்,  அவர் படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மதிமலராக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்த ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான்  சச்சின் வெளியிட்டுள்ளார். தமிழில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு டப் செய்யபட்டு வெளியாகியுள்ளது.

Share this story