"தமிழ் சினிமாவில் என் முதல் பயணம்" நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டா பதிவு வைரல்..!
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. 'குறிச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா போட்ட குத்தாட்டம் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது.
நடிகை ஸ்ரீலீலாவுக்கான மவுசு தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப்பில் உள்ளது. அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு குவிந்து வருகிறது. 'மட்ட' பாடலில் விஜயுடன் நடனமாட திரிஷாவுக்கு முன் நடிகை ஸ்ரீலீலாவிடம் தான் பேசப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை ஸ்ரீலீலா மறுத்துவிட்டர். தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதால், ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவது சரியாக இருக்காதென்று வாய்ப்பை நிராகரித்தார் ஸ்ரீலீலா. பலரும் விஜய்க்கு நோ சொல்லிட்டாரா என்று பேசுபொருளாக்கினர். இந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 'புறநானூறு' படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் ஸ்ரீலீலா. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இது தமிழில் இவர் நடிக்கும் முதல் படம், அதே போல், சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம், ஜிவி பிரகாஷுக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழில் அறிமுகமாவது குறித்து நடிகை ஸ்ரீ லீலா சமூக வலைத்தளத்தில் ஓரூ பதிவிட்டுள்ளார்.
அதில், வணக்கம் தமிழ் சினிமாவில் என் முதல் பயணத்தை தொடங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் இதயங்களை வெல்ல என் முழு முயற்சியையும் செய்வேன். எனவும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், சுதா கொங்கரா மேடம் உங்கள் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது எனவும், அனைவருக்கும் பிடித்த சிவகார்த்திகேயன் சார், இந்த பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் தெரிவித்துள்ளார்.