'இவர்களுடன் நடிக்கும் வரை எனது பயணம் நிறைவடையாது': 'விவேகம்' பட நடிகர்

Vivek obrai
அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விவேக் ஓபராய்.இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விவேக் ஓபராய். இவர் கடந்த 2002-ம் ஆண்டு அஜய் தேவ்கன், மோகன்லால், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான 'கம்பெனி' திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, கிரிஸ் 3, லூசிபர், வினய விதேய ராமா உள்ளிட்ட பல ஹிட்  படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், கடந்த 2017-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரஜினி, கமலுடன் நடிக்கும் வரை தனது பயணம் நிறைவடையாதென்று விவேக் ஓபராய் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'தமிழ் சினிமாவில் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் தலைமுறையில் உள்ள ஒவ்வொரு நடிகருக்கும் ரஜினி சார் மற்றும் கமல் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களுடன் படம் நடிக்கும் வரை எனது பயணம் நிறைவடையாது.'விவேகம்' படத்தில் நடித்தது அருமையாக இருந்தது. அஜித் அண்ணாவுடன் இணைந்து பணியாற்றியது ஒரு அற்புதமான அனுபவம்  அவர் ஒரு சிறந்த மனிதர், அவ்வளவு அன்பானவர். என்னை ஒரு சொந்த தம்பிபோல நடத்தினார்,' என்றார்.

Share this story