எனது சிம்பொனி இசை ஜனவரி 26-ல் வெளியிடப்படும்: இளையராஜா

ilayaraja

தனது சிம்பொனி இசையை அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்போவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் லண்டனில் எனது சிம்பொனி இசையை ரெக்கார்ட் செய்தேன் என்பதையும், அந்த சிம்பொனி இசை அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்படும் என்பதையும் உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக கடந்த மே மாதம் இளையராஜா வெளியிட்ட பதிவில், “நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன். இங்கே திரைப்பட இசையில் கவனம் செலுத்திக்கொண்டும், இடையில் விழாக்களுக்கு சென்றுகொண்டிருந்த போதிலும், ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். பியூர் சிம்ஃபோனியாக எழுதி முடித்துவிட்டேன்” என்று தெரிவித்திருந்தார். அண்மையில் இளையராஜா இசையில் ‘ஜமா’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share this story