“என் ஓட்டு விஜய்க்கு தான்” - சின்னதிரை நடிகை ஆல்யா மானசா பதில்

alya manasa

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆல்யா மானசா. மேலும் சமூக வலைதளங்களிலும் பிரபலமாக இருக்கிறார். இவர் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுரை குறித்து அவர் பேசுகையில், “மதுரையின் உணவை மிஞ்சவே முடியாது. அதே போலத்தான் இங்குள்ள மக்களின் அன்பும். உரிமையுடன் என்னை அழைத்தனர். அந்த உரிமை மதுரையில் கண்டிப்பாக வரும். மற்ற ஊர்களுக்கு சென்றாலும் மதுரை வரும்போது எப்போதும் ஸ்பேஷல்தான்” என்றார்.   vijay

தொடர்ந்து நடிப்பு குறித்து பேசுகையில், “சினிமாவில் வாய்ப்பு வருகிறது. அதில் நடித்தால் நீங்கதான் என்னை தேடி தியேட்டருக்கு வர வேண்டும். ஆனால் சீரியலில் நடித்தால் எல்லாருடைய வீட்டிலும் 9 மணிக்கு வந்துவிடுவேன். இதன் மூலம் அனைவரின் மனதிலும் நெருக்கமாக இடம் பிடிப்பேன் என நம்புகிறேன். அதனால் சீரியலில் நடிப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது” என்றார். 

அவரிடம் விஜய் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னுடைய ஓட்டு அவருக்கு தான். பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பில்லை. குடும்பம், படப்பிடிப்பு என அதிலே நேரம் ஆகிவிடுகிறது. ஆனால் விஜய்க்கு கண்டிப்பாக ஓட்டு போடுவேன்” என்றார். 

Share this story