மிரட்டும் லுக்கில் மயில்சாமி.. தாறுமாறான புதிய கெட்டப் !

mayil

காமெடி நடிகர் மயில்சாமி மிரட்டும் லுக்கில் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் தனது காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் மயில்சாமி. பல முன்னணி நடிகர்களின் குரல்களில் பேசி ரசிகர்களிடையே பிரபலமானார். சினிமாவை தவிர டிவி நிகழ்ச்சிகளில் தொப்பாளராக பணியாற்றியுள்ளார். திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களோடு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

தமிழின் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அஜித், விஜய், விக்ரம், விஷால், சந்தானம், சிவகார்த்திகேயன் என பல ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். கன்னி ராசி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், நகைச்சுவைக்கென்று தனி பாணியையே கடைப்பிடித்து வருகிறார். 

பெரும்பாலும் வடிவேலு, விவேக் போன்ற காமெடி ஜான்புவான்களுடன் இணைந்து நடித்து மக்களை கவர்ந்து வருகிறார். சினிமாவோடு சமூக நலனிலும் அக்கறை கொண்ட மயில்சாமி, பொதுப்பபிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மயில்சாமி மிரட்டும் தொனியில் போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 





 

Share this story