இயக்குநராக வேண்டும் என கூறிய தம்பியை செருப்பால் அடித்தேன்- மிஷ்கின்

இயக்குநராக வேண்டும் என கூறிய தம்பியை செருப்பால் அடித்தேன்- மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கினின் சகோதரரும், ‘சவரக்கத்தி’ படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமான ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘டெவில்’. இந்த படத்தில் விதார்த் மற்றும் பூர்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  மேலும் இந்த படத்தில் ஆதிக் அருண், இயக்குனர் மிஷ்கின், சுபஸ்ரீ ராயகுரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரில்லார் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் சார்பாக ஆர்.ராதாகிருஷ்ணனும், டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.  கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இயக்குநராக வேண்டும் என கூறிய தம்பியை செருப்பால் அடித்தேன்- மிஷ்கின்

படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மிஷ்கின், முதலில் தனது தம்பி ஆதித்யா என்னிடம் வந்து உதவி இயக்குநராக சேர்த்திக் கொள்ளுங்கள் என்று கேட்டபோது, அவனை நான் காலில் இருந்த செருப்பால் அடித்தேன் என தெரிவித்துள்ளார். 

Share this story