" ஹாப்பி பர்த்டே கண்ணம்மா.. " விஜய் சேதுபதிக்கு வாழ்த்து செல்லமாக வாழ்த்து சொன்ன மிஷ்கின்

vijay sethupathi

சிறிய கதாபாத்திரம் மூலம் தனது சினிமா கரியரை தொடங்கி தற்போது சிறப்பான நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் விஜய் சேதுபதி. 50 படங்களுக்கு மேல் நடித்து தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் நாயகனாகவும் கமர்ஷியல் ரீதியாக கொண்டாடப்படும் நாயகனாகவும் வலம் வருகிறார். 
இந்த நிலையில் இன்று ஜனவரி 16ஆம் தேதி அவர் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகக்ள் கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் ‘ட்ரெயின்’ படக்குழு தற்போது விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து புதுப் போஸ்டரையும் சின்ன வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி எமோஷ்னலாக டப்பிங் செய்யும் காட்சி இடம் பெறுகிறது. பின்னணியில் ‘கண்ணக்குழிக் காரா’ என்ற பாடல் ஒலிக்கிறது. இப்பாடலை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். கபிலன் வரிகள் எழுதியுள்ளார். 


இப்படத்தை தாணு தயாரிக்க மிஸ்கின் இயக்கி வருகிறார். மேலும் மிஸ்கினே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். விஜய் சேதுபதியை தவிர்த்து நாசர், ஸ்ருதி ஹாசன்,யூகி சேது, நரேன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  

Share this story