‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் அப்டேட்……

photo

சினிமாத்துறையில் தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கிய வைகை புயல் வடிவேலு, நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலமாக அதை ஆரமித்திருக்கிறார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் தயாராகி உள்ளது.

photo

இந்த நிலையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.. அதற்காக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ வீட்டு நாய், தெருநாய், வெறி நாய், வேட்ட நாய்,சேட்ட நாய் , சொறி நாய், ஓநாய் வரைக்கும் பாத்தவண்டா இந்த ஒபாமா” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து படத்தில் வடிவேலு பெயர் ஒபாமா என்பது தெளிவாக தெரிகிறது.

photo

இந்த வீடியோ படத்தின் மீதான் எதிபார்ப்பை எகிற வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ......

Share this story