ஹீரோவுக்கு என்ட்டு கார்டு போடும் வடிவேலு... திடீர் முடிவுக்கு என்ன காரணம் ?
இனி திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரானா காலத்தில் ரசிகர்கள் மிகவும் மிஸ் பண்ண நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்த அவர், சில ஆண்டுகள் காலம் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இதையடுத்து சிக்கல் தீர்ந்ததையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஹீரோவாக வடிவேலு நடித்தார்.

சுராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த மாதம் வெளியானது. மிகுவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. திரையரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. பழைய காமெடிகளை போட்டு படத்தை எடுத்துள்ளார் வடிவேலு என கடும் விமர்சனங்களும் வைக்கப்பட்டது.
அதனால் வடிவேலு மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இனி திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம். முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக மட்டுமே தொடர்ந்து நடிக்க முடிவெடுத்துள்ளாராம். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்வியே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

