நடிகர் சங்க கட்டிடம் தாமதம்.. நான் காரணம் இல்லை என நடிகர் விஷால் பேட்டி..!

vishal

நடிகர் சங்கக் கட்டிடம் தாமதத்துக்கு நான் காரணம் இல்லை என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்தார். 

மதுரையில் நேற்று ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால், மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்கக் கட்டிடம் தாமதமாக கட்டப்பட்டதற்கு நான் காரணம் இல்லை. 6 மாதங்களில் முடிக்க வேண்டிய கட்டுமானப் பணி, நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தால் 3 ஆண்டுகள் தாமதமாகிவிட்டது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

vishal

இன்னும் நான்கு மாதங்களில் கட்டிடம் பெரிதாகிவிடும்.  இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையில்லாதது. இதைத் தவிர்த்து இருக்கலாம். மக்களைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போது வேதனை ஏற்படுகிறது. எல்லா நாட்டுகளுக்கும் எல்லைகள் உள்ளன. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story