நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்துள்ள 'தண்டேல்' படத்தின் 2-வது பாடல் வெளியானது
1736001333000
சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ளது.அமரன் படத்தைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.சமீபத்தில் முதல் பாடலான 'புஜ்ஜி தல்லி' வெளியாகி 40 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி உள்ளது. இந்நிலையில், 2-வது பாடலான 'நமோ நமச்சிவாய' என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
ALL HAIL THE MAHADEV - #NamoNamahShivaya 🔱💫#Thandel second single #NamoNamahShivaya - The ShivShakti Song out in Telugu 🔱
— Thandel (@ThandelTheMovie) January 4, 2025
▶️ https://t.co/6jux8b5R33
A 'Rockstar' @ThisIsDSP divine trance on @adityamusic 🔥🔊
Sung by @anuragkulkarni_ & @HariPriyaSinger#ThandelonFeb7th pic.twitter.com/1DAy8MgDjR