நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் உருவான 'தண்டேல்' படத்தின் தமிழ் ட்ரெய்லர் ரிலீஸ்

நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் உருவான 'தண்டேல்' படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார்.
அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை இந்தப் படம் பேசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றத்தை அடுத்து இந்தப் படம் வருகிற 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில், 'தண்டேல்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல், ஆக்ஷன், போராட்டம் என சுழலும் கதையை கூறும் டிரெய்லர் வீடியோவை ரசிகர்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.