நாக சைதன்யா- சாய் பல்லவி நடித்த தண்டேல் பட டிரெய்லர் வெளியானது

நாக சைதன்யா- சாய் பல்லவி நடித்த தண்டேல் பட டிரெய்லர் வெளியானது
அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
#Thandel ante?
— Thandel (@ThandelTheMovie) January 28, 2025
Owner kaadhu...LEADER ⚓💪🏻
The most awaited #ThandelTrailer out now ❤️🔥
▶️ https://t.co/8QT65Kvor5
GRAND RELEASE WORLDWIDE ON FEBRUARY 7th 💥💥#ThandelonFeb7th pic.twitter.com/ZWeo6QaQtx
திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான நமோ நம ஷிவாயா லிரிக் வீடியோ கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் டிரெய்லர் வெளியாகியுள்ளது.