நாக சைதன்யா - சாய் பல்லவியின் ‘தண்டல்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு
நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள ‘தண்டல்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் புதிய படம் ஒன்றுக்காக இணைந்து நடிக்கின்றனர். சந்தூ மொண்டேடி (Chandoo Mondeti) இயக்கும் இப்படத்துக்கு ‘தண்டல்’ (Thandel) என பெயரிடப்பட்டுள்ளது. இவர் தெலுங்கில் ‘ப்ரேமம்’ படத்தை ரீமேக் செய்திருந்தார். படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.
#Thandel GRAND RELEASE WORLDWIDE ON FEBRUARY 7TH, 2025 #ThandelonFeb7th#Dhullakotteyala @Sai_Pallavi92 @chandoomondeti @ThisIsDSP @GeethaArts #AlluAravind #BunnyVas @ThandelTheMovie @_riyazchowdary @Shamdatdop @NavinNooli @KarthikTheeda @bhanu_pratapa @viswanathart… pic.twitter.com/IOnff5i0YN
— chaitanya akkineni (@chay_akkineni) November 5, 2024
இன்னும் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ள நிலையில் விரைவில் மொத்த படப்பிடிப்பும் முடிந்தும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க உள்ளன. படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை இந்தப் படம் பேசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.