நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண சடங்குகள் தொடக்கம்...!

sobita
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் திருமணம் நடக்க உள்ளது. திருமணம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் 8 மணிநேர  திருமண விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி வட இந்தியாவில் மணமகள் வீட்டில் நடக்கும் திருமணத்துக்கு முந்தைய வைபவமான ஹல்தி சடங்கு நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மங்களாசாசனம் எனும் நலங்கு சடங்கை அப்பா மற்றும் அம்மா இணைந்து சோபிதா துலிபாலாவுக்கு நடத்தியுள்ளனர். சடங்கில் நலங்கு வைத்து மஞ்சள் தேய்த்து சோபிதா துலிபாலா குளித்த புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

 

Share this story