வசூலை குவிக்காத ‘கஸ்டடி’... தொடர்ந்து சரிக்கலில் நடிகர் நாகசைதன்யா !

custody

நாகசைதன்யா நடிப்பில் வெளியான ‘கஸ்டடி’ திரைப்படம் 10 கோடி ரூபாய் கூட வசூலிக்காததது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கஸ்டடி’. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

custody

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இந்த படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. போலீஸ் கதைக்களத்தில் வெளியான இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால் எதிர்பார்த்தப்படி இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படம் முதல் நாளில் வெறும் நான்கு கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் வெறும் 9.78 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. 10 கோடி கூட வசூலிக்காததது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதற்கிடையே தெலுங்கில் தொடர்ந்து நடிகர் நாகசைதன்யாவின் திரைப்படங்கள் சருக்கல்களை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story