நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா திருமண க்ளிக்ஸ்

naga

ஹைதராபாத்தில் நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யா பாலிவுட் நடிகை ஷோபிதா துலிபாலா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து நேற்று(04.12.2024) ஹைதராபாத்தில் அவர்களது குடும்ப ஸ்டூடியோவான அண்ணாபூர்னா ஸ்டூடியோஸில்  பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

 


இந்த திருமணத்தில் மணப்பெண் சோபிதா காஞ்சிவரம் புடவையில் தோன்றினார். அதேபோல் மணமகன் நாக சைதன்யா பஞ்சகச்ச உடையில் தோன்றினார். இதனைத்தொடர்ந்து திருமணத்தில் நாக சைதன்யா தாலி கட்டிய பிறகு சோபிதா எமோஷனலாகி ஆனந்த கண்ணீர் சிந்தினார். இரவு 8 மணிக்கு தொடங்கிய திருமண நிகழ்வு, 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.


இந்த திருமணத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த திருமண நிகழ்வு குறித்து நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சைதன்யா மற்றும் சோபிதா ஆகியோர் இந்த அழகான அத்தியாயத்தை தொடங்கியுள்ளது உணர்ச்சிகரமான தருணம்.

Share this story