கர்ப்பமாக இருந்த சமந்தாவை இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினாரா நாக சைதன்யா! – பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

photo

சமந்தாவின் கருவை கலைக்க நாகசைத்தன்யா கட்டாயப்படுத்தியதால்தான் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக பிரபலம் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

photo

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா, இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார் சமந்தா. இந்த நிலையில் சினிமாதுறையில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்த இந்த ஜோடி கடந்த 2021ஆம் ஆண்டு தங்கள் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

photo

திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதி திடீரென இப்படியொரு முடிவை அறிவித்தது  திரைத்துறை பிரபலங்கள் உட்பட, ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து பல தகவல்கள் இவர்களின் விவாகரத்து குறித்து வெளியான வண்ணம் இருந்தது.  ஆனால் இது குறித்து சமந்தா தரப்போ, நாக சைத்தன்யா தரப்போ எந்த தகவலையும் வெளியிடவில்லை.  நிலைமை இப்படியிருக்க, தற்போது பாலிவுட்டில் சர்சைக்குரிய விமர்சகரான  உமர் சந்து பகீர் கிளப்பும் தகவலை வெளியிட்டுள்ளார்.

photo

அதில் அவர் கூறியதாவது, நாக சைதன்யா கொடுத்த டார்ச்சரால்தான் நடிகை சமந்தா விவாகரத்து செய்ததாகவும் அதோடு கருக்கலைப்பு செய்ததாகவும், சமந்தாவை பொறுத்தவரை நாகசைதன்யா மிகவும் மோசமான கணவர் என்றும் அவரால் உடலளவிலும், மனதளவிலும் சமந்தா டார்ச்சரை அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.


 

Share this story