லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது குறித்து பகிர்ந்த நாகார்ஜுனா!

lokesh kanagaraj

கூலி' திரைப்படத்தில் நடித்து வரும் நாகார்ஜுனா அப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பணிபுரியும் அனுபவம் குறித்து பேசியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கூலி’ படத்தில் நடித்து வரும் நாகார்ஜுனா அப்படம் குறித்து பேசியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சஹீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர்களில் முதன்மையாக இருக்கும் லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

மேலும் அனைத்து மொழிகளில் உள்ள உச்ச நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். தற்போது கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைப்டெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் நாகார்ஜுனா மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அமலா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ’கூலி’ மற்றும் ’குபேரா’ திரைப்படம் தொடர்பாக நடிகர் நாகார்ஜுனா பேசியுள்ளார். கூலி திரைப்படத்தில் சைமன் என்ற கேரக்டரில் நாகார்ஜுனா நடித்து வருகிறார்.

nagarjuna
இதுகுறித்து அவர் பேசுகையில், "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறேன். அவர் Gen Z கிடையாது. ஆனாலும் அவரை Gen Z இயக்குநர் என்று தான் சொல்வேன். அவ்வாறு ஒரு இயக்குநர். நான் ஒரு புதிய திரைப்பட வடிவத்தை அவரிடம் பார்க்கிறேன். அவரது கேரக்டரில் நடிக்கும் போது ஒரு சுதந்திரம் இருக்கிறது.


படத்தின் நாயகன், வில்லன் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற வரையறை வைத்திருக்க மாட்டார். அவர் எனக்கு வழங்கும் சுதந்திரம் மிகவும் பிடிக்கும். அதேபோல் மறுபக்கம் தனுஷுடன் குபேரா படத்தில் நடிக்கிறேன். அப்படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா மிகவும் எதார்த்தமான இயக்குநர். தற்போது பரிசோதனை முயற்சியாக இந்த படங்களில் நடித்து வருகிறேன்” என கூறியுள்ளார்.

Share this story