ஜெயிலர் 2 படத்திலும் ரஜினியுடன் இணையும் நாகார்ஜுனா...?

jailer 2

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க நாகார்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்று வருகிறது.
படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.

rajini
இந்நிலையில் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவை படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க படக்குழு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள கூலி திரைப்படத்திலும் நாகர்ஜுனா நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்க அவர் ஒப்புக்கொண்டால் அடுத்தடுத்து ரஜினியுடன் இரண்டு திரைப்படங்களில் நாகர்ஜுனா நடிப்பார்.
 

Share this story